விவசாய தோட்டத்தில் மின் கம்பி அறுந்து ஒருவர் பலி

X
திண்டுக்கல் அகரம் அருகே பாப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் மின் கம்பி அறுந்து கிடந்தது. இந்த நிலையில் இன்று மேய்ச்சலுக்காக சென்ற பசுமாடு மீது மின்சாரம் தாக்கி பசு மாடு மற்றும் மேய்ச்சலுக்காக சென்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை. தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் மின்கம்பி மீது 4 மயில்கள் அமர்ந்திருந்ததாகவும் பாப்பனம்பட்டியை சேர்ந்த விக்னம்மாள்(50) மேய்ச்சலுக்காக பசுமாட்டை கூட்டி சென்றபோது இவர்களை கண்ட மயில்கள் திடீரென பறந்து சென்றதால் மின்கம்பி அறுந்து விழுந்து விக்னம்மாள் மற்றும் பசுமாடு பலியானார்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story

