புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் திருநாள்

புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் திருநாள்
X
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் திருநாள் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை
இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது அதனைத் தொடர்ந்து மரித்த இயேசு 3-வது நாள் உயிர்த்தெழுந்த தினமான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் ஞாயிறு பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித வியாகுல அன்னை ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பள்ளியின் நடுவே ஆலயத்தில் முன் பகுதியில் கல்லறையில் இருந்து இயேசு உயிர்த்தெழும் நிகழ்வு செய்யப்பட்டிருந்தது. கூடியிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி உற்சாகமாக ஒருவர் ஒருவர் ஈஸ்டர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story