திமுக சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்

திமுக சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்
X
திமுக சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
அரியலூர், ஏப்.20- பாஜக}அதிமுக கூட்டணியிடமிருந்து தமிழகத்தை பாதுகாப்போம் எனக் கூறி அரியலூரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் பொதுமக்களிடம் சனிக்கிழமை துண்டு பிரசுரங்களை வழங்கினர்.மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குலோத்துங்கன் தலைமையில், திமுக மாவட்ட துணைச் செயலர் அருங்கால் சந்திரசேகர், நகரச் செயலர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அந்த துண்டு பிரசுரத்தில், நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்தது, மாணவ, மாணவியரின் உயிரை பறித்தது, 3 வேளாண் சட்டத்துக்கு ஆதரவு அளித்தது, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சிஏஏ சட்டத்துக்கு ஆதரவளித்தது, மின்சார கட்டணம் உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்துக்கு ஆதரவளித்தது, இஸ்லாமியர்களை 2 ஆம் தர குடிமக்களாக்கும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவளித்தது போன்ற தமிழ்நாட்டுக்கு எதிரான பாதங்களுக்கு துணைப் போனவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி என்றும், ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், கல்வி நிதி மறுப்பு, தொகுதி மறுசீரமைப்பு என பாஜக அரசின் அனைத்து துரோகங்களுக்கும் துணை நின்று கூட்டணி அமைத்துள்ள அதிமுகவை விரட்டியடிப்போம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. :
Next Story