மதுரையில் ஆய்வு பணியில் ஈடுபட்ட அமைச்சர்கள்
மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் மதுரை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு மே இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோரிப்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அதற்கான பணிகளுக்கான கட்டுமான பொருட்கள் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் என்ற காரணத்தினால் அதனை அப்புற படுத்தி பாதுகாப்பாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக அமைப்பதற்கு இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ. வ. வேலு, வணிக வரித்துறை அமைச்சர் அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான ஆலோசனைகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ,மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன்,மாநகராட்சி ஆணையாளர் , சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், தளபதி எம்எல்ஏ,மேயர், மற்றும் உயர் அதிகாரிகள் பல கலந்து கொண்டனர்
Next Story






