ராமநாதபுரம் அண்ணா திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம்அதிமுக கண்ணீர் அஞ்சலி போராட்டம் தமிழக முழுவதும் மாவட்டம் மாவட்டந்தோறும் மெழுகுதிரி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்திருந்தார். 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழ் நாட்டில் 22 மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக அதிமுக மாணவர் அணியின் சார்பில் மாநில மாணவரணி துணைச்செயலாளர் செந்தில்குமார் தலைமையில், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ முனியசாமி மற்றும் மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிராக கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது. அதில் நீட் ரத்து என்னாச்சு என கேள்வி குறியுடன் சோக தீப விளக்குகளை எரிய விட்டிருந்தது அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் அணி இணைச்செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகர் கழக முன்னோடிகள் அதிமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story




