தனியார் பேருந்தும் மினி வேணும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி மின்வாரிய அலுவலகம் அருகே மதுரையில் இருந்து போடி நோக்கி சென்ற தனியார் பேருந்தும் தேனியில் இருந்து ஆண்டிபட்டிக்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து இடிபாடுகளில் சிக்கி லோடு வேன் ஓட்டுநர் ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த 45 வயது முத்துலிங்கம் படுகாயங்களுடனும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு மேலும் தனியார் பேருந்தில் வந்த 20 க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடனும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி சாலையின் மையத்தில் நடைபெற்ற விபத்தால் தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Next Story



