கட்டிட தொழிலாளியை கொலை செய்த ஓய்வு பெற்ற காவலர் கைது

X
மதுரை ஆனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவர் காவல்துறையில் ஏட்டாக பணிபுரிந்து கடந்த 2009-ல் ஓய்வு பெற்றுள்ளார். இவரது வீட்டுக்கு பக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த கட்டிடத் தொழிலாளி அழகுபாண்டிக்கும் (34). இவருக்கும் இடையே வீட்டு வாசல் பகுதியை பயன்படுத்துவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.19) காலை நடராஜன் வீட்டுக்குள் சென்று அழகுபாண்டியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் வீட்டில் இருந்து அரிவாளால் அழகுபாண்டியை கையை வெட்டியுள்ளார். இதில் ரத்தம் அதிகமாக வெளியேறி சம்பவ இடத்திலேயே அழகுபாண்டி உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த கூடல்புதூர் போலீசார் உடலைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக நடராஜனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

