சங்கரன்கோவிலில் இன்று நூலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புளியங்குடி-சுரண்டை இணைப்பு சாலையில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நூலகம் திறப்பு விழாவானது தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். மேலும் இந்த நூலகத்தில் மாநில இளைஞர் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பெயரில் போட்டித் தேர்வுக்கு படிக்கின்ற புத்தகங்கள், திராவிட இயக்கத்தின் வரலாறு சார்ந்த புத்தகங்கள் மற்றும் பல்சுவை கதை புத்தகங்கள் தமிழக பாரம்பரிய வரலாறு சார்ந்த புத்தகங்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் நூலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர்.ராஜா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ராணி ஸ்ரீகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

