நீட் மரணம்; அதிமுக அஞ்சலி

X
குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு குமரி மாவட்ட அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டிக்கும் விதமாக நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ மாணவிகளுக்கு குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. மாணவர் அணி மனோகரன் சார்பில் மாவட்ட செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி பச்சைமால், குமரி கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் சேவியர்மனோகரன், குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜாண்தங்கம், ஆகியோர் முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி சார்பு அணி நிர்வாகிகள் மாணவரணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

