அரவக்குறிச்சி அருகே விவசாய கணக்கில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள்.

அரவக்குறிச்சி அருகே விவசாய கணக்கில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள்.
அரவக்குறிச்சி அருகே விவசாய கணக்கில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பைபாஸ் சாலை அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஒருவர் தவறி விழுந்து விட்டதாக அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் விழுந்தவரை மீட்பதற்காக கயிறு கட்டி கிணற்றுள் இறங்கி, தவறி விழுந்தவரை கயிற்றால் பிணைத்து கட்டி, கிணற்றிலிருந்து மேலே இழுத்து, அந்த நபரை உயிருடன் காப்பாற்றினர். பிறகு அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. கிணற்றில் விழுந்தவரை லாவகமாக மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
Next Story