தஞ்சை சீர்திருத்தப் பள்ளியிலிருந்த சிறுவன் தப்பி ஓட்டம்

X
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருட்டு வழக்கில் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் இந்த சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். இந்த நிலையில், சனிக்கிழமை மாலை அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இது குறித்து பள்ளி அலுவலர்கள் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சிறுவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

