காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

X
பெரம்பலூர் அருகே பழங்குடி என பட்டதாரி வாலிபர் மீது பொய் வழக்கு பதிவு செய்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப் -இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் மீது வன்கொடுமைத் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பாடாலூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை மலையப்பன் நகரை சேர்ந்தவர் அருண். பழங்குடி இனத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 4.ம் தேதி அவர் வீட்டில் இருந்த போது பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.மேலும் அவர் திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு ஆதரவாக திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் பகுதியில் சாலையில் குறுக்கே படுத்துக் கொண்டு பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளதோடு நாகராஜ் என்ற முதியவரின் இரு சக்கர வாகனம் வீட்டில் நின்று கொண்டிருந்ததை காவலர் சுரேஷ் என்பவர் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து அந்த வாகனத்தை பழங்குடி இனத்தை சேர்ந்த அருண் திருடியதாகவும் பாடாலூர் காவல்துறையினர் சட்ட விரோதமாக பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும், இந்த சம்பவத்தை கண்டித்தும், பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி சார்பில் அதன் திருச்சி கோட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில், இந்துமுன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் முன்னிலையிலும், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடாலூர், ஊட்டத்தூர் பிரிவு சாலை பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாவட்ட காவல் துறையையும், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப் -இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசாரையம்கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

