மலை வாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

மலை வாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
X
மதுரை உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள மொக்கத்தான்பாறை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நிறுவனத் தலைவர் கே.என். இசக்கிராஜாத்தேவர் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின் மதுரை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அழகர்சாமி தலைமையில் நேற்று (ஏப்.20)சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு,எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சேடப்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story