ஓடைக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழுமலை அருகே பாறைப்பட்டி பகுதியில் இருந்து மானுாத்து கண்மாய் செல்லும் ஓடைக்குள் நேற்று ( ஏப்.20) சுமார்.45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் பச்சை நிறத்தில் வேட்டியுடன் கிடந்த பிணத்தின் அருகே பாதி குடித்த நிலையில் குளிர்பான பாட்டில், கடலை பருப்பு பாக்கெட் கிடந்துள்ளன. அவர் யார்?, எதற்காக இங்கு வந்தார்?. எப்படி இறந்தார்? என்ற கேள்விகளுக்கு விடை காண தீவிர விசாரணையில் எழுமலை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Next Story

