பீரோவில் இருந்த நகை, பணம் திருட்டு

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முதலியார் கோட்டையை சேர்ந்த அழகு பாண்டி என்பவர் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிவேதா (30) என்பவர் நேற்று (ஏப்.20) உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு செல்ல பீரோவில் இருந்த நகையை எடுக்க சென்ற போது. அங்கிருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.13,000 மாயமானது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த நிவேதா பீரோ உடைக்கப்படாமல் பணம் மாயமானது குறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

