கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து !

கோவையில் உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கோவையில் உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கில் நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவில் 253 ஏக்கரில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் இந்த கிடங்கில், கோடை காலத்தில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்களில் 60க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், குப்பைகள் அதிக அளவில் இருப்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. நீண்ட நேரம் போராடி மாலை தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
Next Story