கோவை: இயேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக சித்தரிப்பு !

கோவை: இயேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக சித்தரிப்பு !
X
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கோவை, புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு இரவு திருப்பலி நடைபெற்றது.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கோவை, புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு இரவு திருப்பலி நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நிகழ்வு தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த உயிர்த்தெழுதல் காட்சியில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரணித்த பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து கல்லறையின் கல்லை அகற்றி வெளியே வருவது போன்ற உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்கொள்ளாக் காட்சியை ஏராளமானோர் கண்டு பக்தி பரவசத்துடன் நேற்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.
Next Story