கோவை: புனித மைக்கேல் பேராலயத்தில் ஈஸ்டர் நள்ளிரவு பிரார்த்தனை !

கிறிஸ்தவர்களின் புனித பண்டிகைகளுள் ஒன்றான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள புனித மைக்கேல் ஆதித்தூதர் பேராலயத்தில் நள்ளிரவு சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் புனித பண்டிகைகளுள் ஒன்றான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள புனித மைக்கேல் ஆதித்தூதர் பேராலயத்தில் நேற்று நள்ளிரவு சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தி சிரத்தையுடன் பங்கேற்று இயேசு கிறிஸ்துவை வழிபட்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில் உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு கோவையில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு கூட்டு பிரார்த்தனை நிகழ்வுகள் நடைபெற்றன. கோவை டவுன்ஹால் புனித மைக்கேல் ஆதித்தூதர் பேராலயத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனைக்கு பேராயர் தாமஸ் அக்வினாஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர், இயேசு கிறிஸ்துவின் 33 ஆண்டுகால வாழ்க்கை, அவர் போதித்த விழுமியங்கள், அவர் அனுபவித்த துன்பங்கள் மற்றும் உயிர்த்தெழுந்த மகத்துவம் ஆகியவற்றை பக்தர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, கண்களை மூடி அமைதியாக இயேசு கிறிஸ்துவை வேண்டினர். இந்த நள்ளிரவு பிரார்த்தனை, ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
Next Story