கண்ணை மூடிக் கொண்டு ஓவியம் வரைந்த ஆசிரியர்

X
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி படத்தை "கண்களை மூடிக்கொண்டு" வரைந்தார். அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் 12 ஆயிரத்து 500 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது, பணியைச் சேர்ந்த 2012 முதல் கோடை விடுமுறையின்போது சம்பளம் இன்றியும், அரசு சலுகைகள் இன்றியும் பணியாற்றுகிறோம், வாழ்வாதாரமின்றி தவிக்கிறோம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் பற்றி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் மற்றும் நடக்கும் பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிப்பு அறிவிக்க வேண்டி பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் தன் கண்களை துணியால் மூடிக்கொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி படத்தை ஒரே நிமிடத்திற்குள் வரைந்தார்.
Next Story

