வெளிநாட்டில் கடத்தப்பட்டவர்களை மீட்டுத்தரக்கோரி மனு

X
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த நூர் முகம்மது இஸ்மாயில் மற்றும் அவரது உறவினர் முஹமது தாரிக் ஆகியோர் பிப்ரவரி 13ஆம் தேதி மலேசியா சுற்றுலாவிற்கு சென்றனர். சில நாட்களுக்கு முன், நூருல் இஸ்மாயிலின் சகோதரரிடம் மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு, இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுவிக்க ரூ. 26 லட்சம் கொடுக்குமாறு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுக்காவிட்டால் உடம்பில் உள்ள பாகங்களை விற்பனை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சிவகங்கை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, இருவரையும் மீட்டுத் தர கோரி மனு அளித்தனர்.
Next Story

