சமுதாய கூடத்தினை திறந்து வைத்த அமைச்சர்

X
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்மாவலி ஊராட்சி பகுதியில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தினை, அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்மாவலி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் IGFF வட்டி வரவு மற்றும் உபரி நிதி வட்டி வரவு திட்டத்தின் கீழ் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வூராட்சியை பொறுத்த வரையில் கடந்த நான்காண்டுகளில் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் வரி வசூல் பெறப்பட்டுள்ளது. ஆனால், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.04.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும் என பேசினார்
Next Story

