புனித அந்தோணியார் குருசடி அச்சிப்பு

X
கிள்ளியூர் ஒன்றியம், இனயம் புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஹெலன் நகர் மீனவ கிராமத்தில் புனித அந்தோனியார் குருசடி அர்ச்சிப்பு மற்றும் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஹெலன் நகர் பங்கு பணியாளர் ஆரோக்ய ஜெனிஸ் தலைமையில், ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் முன்னிலையில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் இராஜசேகரன், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின், ஹெலன்நகர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Next Story

