சிவகிரி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

X
திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த தம்பதி முனியாண்டி - பெரியநாயகி (48). இவா்கள் ஜெயபால் என்பவருடன் சோ்ந்து தென்காசி மாவட்டம் ராயகிரியில் கரும்பு அரைவை ஆலை நடத்தி வருகின்றனா். இத்தம்பதி ஜெயபாலுக்கு சொந்தமான டிராக்டரில் கரும்பு ஏற்றுவதற்காக தேவிபட்டணத்துக்குச் சென்று கொண்டிருந்தனா். ஆதிபராசக்தி கோயில் அருகேயுள்ள வேகத்தடையில் டிராக்டா் ஏறி இறங்கியபோது, பெரியநாயகி தவறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
Next Story

