ஜீவனாம்சம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

தற்கொலை முயற்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி சேர்ந்தவர் சிவகுமரன் இவர் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார் சிவக்குமாரனுக்கும், கணிப்பிரியா (34) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது திருமணமாகி குழந்தை இல்லாததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஆகி தனியாக வாழ்ந்து வந்தனர் சிவகுமாரன் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணிப்பிரியா தனது கணவர் சிவகுமாரன் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இந்நிலையில் இதுக்குறித்து இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று கணிப்பிரியா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது தனது நகைகளை பறித்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய போவதாக தனது கணவர் கூறியதாகவும் இதனால் தான் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து தனக்கு உரிய முறையில் தனது கணவரிடம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி தற்கொலைக்கு முயற்சித்தார் பின்னர் அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி பின் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு ஜீவனாம்சம் கேட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
Next Story