விழிப்புணர்வு பிரச்சார பேரணி
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து போதை பொருள்களுக்கு எதிராகவும், போதை பொருள்களால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து இன்று (ஏப்.21) நடைபெற்ற போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மதுரை காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) வனிதா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் காவல் துணை ஆணையர் (தெற்கு) இனிக்கோ திவ்யன் அவர்கள் உடனிருந்தார். இப்பேரணியானது மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இருந்து துவங்கி காந்தி மியூசியம் அருகே நிறைவடைந்தது. இப்பேரணியில் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், ரெட் கிராஸ் ரெட் கிராஸ் நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story




