புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த சேர்மன்

புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த சேர்மன்
X
சிவகங்கையில் புதிய வகுப்பறை கட்டிடத்தை சேர்மன் திறந்து வைத்தார்
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை கட்டிடங்களை நகர்மன்ற தலைவர் சிஎம். துரைஆனந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மரிய செல்வி, நகராட்சி ஆணையாளர், பொறியாளர், அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராஜேஸ்வரி (ராமதாஸ்) உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவச் செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, சிறப்புரையும் வழங்கப்பட்டது. இந்த புதிய கட்டடங்கள் மாணவர்களின் கல்வி பயணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
Next Story