வடக்கு பாளையத்தில் கடை திறப்பு விழாவில் தள்ளுபடி விற்பனையில் இசைக்கருவிகள்.
வடக்கு பாளையத்தில் கடை திறப்பு விழாவில் தள்ளுபடி விற்பனையில் இசைக்கருவிகள். கரூர் மாவட்டம் காந்திகிராமம் அருகே உள்ள வடக்கு பாளையம் பஸ் நிலையத்தில் குளோபல் பாரடைஸ் என்ற பெயரில் புதிய கடை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. முதல் நிகழ்வாக கடையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து அனைவரையும் வரவேற்றனர். கடையில் வைக்கப்பட்டுள்ள கலைப் பொருட்களை அனைவரும் பார்த்து ரசித்தனர். இங்கு குளோபல் மியூசிக்கல்ஸ் என்ற பெயரில் இசைக்கருவிகள் ஜூலை மாதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை நடப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் குளோபல் மியூசிக் அகாடமியில் கீபோர்டு,கிட்டார், டிரம்ஸ், சிங் கிங், வீணை மற்றும் நடனம் போன்ற அனைத்து கலை வகுப்புகளும் சிறந்த அனுபவமிக்க இசை கலைஞர்களால் நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
Next Story





