நில மோசடி வழக்கில் ஒருவர் கைது

X
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே நிலமோசடி வழக்கில் செந்தில்நாதன் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரெத்தினம்மாளின் தந்தை மாரிமுத்துவின் 2 ஏக்கர் நிலத்தை அவரது குடும்பத்தினர் அனுபவித்து வந்துள்ளனர். ஆனால், 2016ம் ஆண்டு செந்தில்நாதன், அவரது மனைவி கவிதா மற்றும் இருவர் அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேவகோட்டை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தேவகோட்டை டவுன் போலீசார் செந்தில்நாதனை கைது செய்தனர். மற்ற மூவரும் தலைமறைவாக உள்ளனர்.
Next Story

