காவிரி கூட்டு குடிநீர் பைப் உடைந்து சேதம்

காவிரி கூட்டு குடிநீர் பைப் உடைந்து சேதம்
X
திருப்பாச்சேத்தி அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து சேதம் - வீணாகும் தண்ணீர்
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பைப் லைன் மீனாட்சிபுரம் பாலத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக இந்த பைப் லைன் முறிவு ஏற்பட்டதால், 10 அடி உயரத்திற்கு தண்ணீர் வெடித்தெழுந்து வெளியேறி வருகிறது. இதனால் பாலத்தின் சுவர்கள் அனைத்தும் நனைந்து, தூண்கள் சேதமடையும் அபாயம் நிலவுகிறது. இந்த உடைப்பு காரணமாக குடிநீர் வீணாகும் பாலத்தின் நிலைத்தன்மையும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுது சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story