விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்

விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்
X
22 பேர் உயிர் தப்பினர்
குமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் தனியார் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து கடியப்பட்டணத்தை சேர்ந்த அருள் ரமேஷ் (50) என்பவர் விசைப்படகில் நேற்று ஈஸ்டர் முடிந்து இரவு கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றனர். விசைப்படகை லாரன்ஸ் (35) என்பவர் ஓட்டினார். மேலும் 21 மீனவர்கள் அந்த படகில் சென்றனர். இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் முட்டத்திலிருந்து 22 கடல் மைல் தொலைவில் அவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பெரிய சரக்கு கப்பல் ஒன்று திடீரென விசைப்படகு மீது உரசி விட்டு சென்றது. இதனால் விசைப்பட குலுங்கியதுடன் அதிலிருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதில் விசைப்படகின் பின்பகுதியில் இருந்து கேரஸ் உடைந்து சேதம் அடைந்தது. பின்னர் மீனவர்கள் மீன் பிடிக்காமல் காலை கரைத் திரும்பி, இது குறித்து குளச்சல் மரைன் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சேதம் அடைந்த விசைப்படகை பார்வையிட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விசைப்படகு மீது உரசி விட்டு நிற்காமல் சென்றது தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்லும் சரக்கு கப்பல் என தெரியவந்துள்ளது. மேலும் சரக்கு கப்பல் விசைப்படகு மீது மோதி இருந்தால் உயிரிழப்பு மற்றும் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.
Next Story