சங்கரன்கோவிலில் கொலை குற்றவாளி தலை மறைவு : கோர்ட் பிடிவாரண்ட்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதுகாவலராக பணிபுரிந்த ராமராஜ் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்தில் ஜானகிராமன், நரேந்திரபால்சிங், சோனு ஆகிய மூவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு திருவேங்கடம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்... பின்னர் மூன்று பேரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டு குற்றம் நிருபிக்கப்பட்டு நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி குற்றவாளிக்கு ஆயுதன்டனை அளித்து உத்தரவிட்டார். இதில் நரேந்திரபால்சிங், சோனு ஆகிய இருவரை காவல்துறையினர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்... இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஜானகிராமன் என்ற சிவா தலைமறைவாகிவிட்டதால் இவரை பிடிக்க காவல்துறையினர் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தியும் குற்றவாளியை காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை. இதனைதொடர்ந்து தலைமறைவாக உள்ள ஜானகிராமனை தேடப்படும் குற்றவாளியாக மாவட்ட முதன்மை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்து திருவேங்கடம் காவல்துறையினர் ஆயுள்தண்டனை குற்றவாளி ஜானகிராமன் தலைமறைவாகி விட்டதால் நீதிமன்ற உத்தரவுப்படி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்...
Next Story

