தென்காசியில் பெண்கள் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு துவக்கம்

X
தென்காசி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையம், தென்காசி அலுவலகம் மூலம் தமிழக அரசின் குறுங்குழும திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள 'ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தை' தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அரசு சேக்கிழார் பள்ளி வளாகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே.கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டு இக்குழுமத்தின் ஆடை வடிவமைப்பு மாதிரியை வெளியிட்டனர்.
Next Story

