ஆய்க்குடியில் சிமென்ட் சாலைப் பணிகள் தொடக்கம்

X
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலைப் பேரூராட்சியில் சிமென்ட் சாலை, வடிகால் பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. 15ஆவது நிதிக் குழு திட்டம், பொது நிதித் திட்டம் 2024-25இன் கீழ் ரூ. 15.50 லட்சம் மதிப்பில், 9ஆவது வாா்டு குட்டி நகா் தெருக்களில் இப்பணிகள் நடைபெறவுள்ளன. பேரூராட்சித் தலைவா் க. சுந்தர்ராஜன் இப்பணிகளைத் தொடக்கிவைத்தாா். செயல் அலுவலா் ஞா. தமிழ்மணி, இளநிலைப் பொறியாளா் பி. சிவக்குமாா், பேரூராட்சி உறுப்பினா் சிந்துமொழி காா்வின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Next Story

