மதகுபட்டி அருகே மணல் கடத்தல்

X
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கத்தப்பட்டு பகுதியில் உள்ள மணிமுத்தாற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக கத்தப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி, மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வீரக்குமார்(45) சடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து மணல் மற்றும் வேனை பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story

