தென்காசி அருகே சேதமான மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்

தென்காசி அருகே சேதமான மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்
X
சேதமான மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே மேல ஆம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருத்த பிள்ளையூர் கென்னடி தெருவில் ஆபத்தான நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து மின் கம்பம் ஒன்று எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் இதனை அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட்யிடம் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story