கரூரில் அங்கீகாரம் பெற்ற கல்லூரி எனக்கூறி மாணவிகளை மோசடி செய்த நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு அளித்த முன்னாள் மாணவிகள்.

கரூரில் அங்கீகாரம் பெற்ற கல்லூரி எனக்கூறி மாணவிகளை மோசடி செய்த நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு அளித்த முன்னாள் மாணவிகள்.
கரூரில் அங்கீகாரம் பெற்ற கல்லூரி எனக்கூறி மாணவிகளை மோசடி செய்த நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு அளித்த முன்னாள் மாணவிகள். கரூர் மாரியம்மன் கோவில் அருகே ARS குரூப் ஆஃப் காலேஜ் என்ற நர்சிங் கல்லூரியில் பயின்று முடித்த முன்னாள் மாணவிகள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர், பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்றும் 100% அரசு வேலை உறுதி என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அங்கு கல்வி பயின்ற மாணவிகள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுத்தனர். இந்த புகார் மனு குறித்து மாணவிகள் தெரிவிக்கும்போது, நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.12ம் வகுப்பு முடித்திருந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அபுல் ஹசேன் என்பவர் எங்களின் பெற்றோர்களை கைபேசி எண்ணில் அழைத்து, தான் ARS குரூப் ஆஃப் காலேஜ் என்ற நர்சிங் கல்லூரி நடத்தி வருவதாகவும், அதில் உங்கள் மகளை சேர்த்து படிக்க வைத்தால் நூறு சதவிதம் அரசு வேலையும் மற்றும் தனியார் துறைகளில் அவருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் படித்து முடித்ததும், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு BSS சான்றிதழ்களும், மூன்றாம் ஆண்டு படித்ததற்கு பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்களும் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியதால் எங்களின் பெற்றோர்கள் அந்த கல்லூரியில் சேர்த்து விட்டனர். மூன்றாண்டுகள் படித்து முடித்த பிறகு அவர்கள் அளித்த சான்றிதழ்கள் ஏற்புடையதாக இல்லை. பல்கலைக்கழக சான்றிதழும் வழங்கவில்லை. அதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு, படித்து முடித்து நல்ல வேலையில் சேரலாம் என்ற கனவும் பொய்த்து போனது. இதே புகார் சம்பந்தமாக முன்பு தங்களிடம் ஒரு மனு கொடுத்திருந்தோம் அதுவும் விசாரணையில் இருக்கிறது. பொய்யான தகவல்களை கூறி மாணவர்களின் வாழ்வோடு விளையாண்டு கொண்டிருக்கும் ARS கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர். கல்வி நிறுவனம் தங்களை ஏமாற்றியதாக மாணவிகள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story