சயனபுரம் அருகே தொட்டியில் விழுந்த புள்ளி மான் மீட்பு!

X
ராணிப்பேட்டை மாவட்டம் சயனபுரத்தில் முனி கிருஷ்ணன் என்பவர் கழிவுநீர் தொட்டி ஒன்றை கட்டி வருகிறார் இந்நிலையில் இன்று தண்ணீர் இல்லாத அந்த தொட்டியில் புள்ளிமான் ஒன்று விழுந்து கிடந்தது தெரிந்தது. இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து புள்ளி மானை பாதுகாப்பாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் பின்னர் பாணாவரம் காப்பு காட்டில் வனத்துறையினர் புள்ளிமானை விட்டனர்.
Next Story

