காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.....

காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.....
X
விவசாய நிலங்கள் பாதிப்பு அடையாமல் இருக்க யானைகளை விரட்டும் பணி தீவிர படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்
கூடலூர் அருகே வடவயல் பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்..... நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகளில் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும் நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள வடவயல் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து நெல், வாழை, தென்னை, பாக்கு, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பாதிப்படைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானை விரட்டும் குழுவினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் காட்டு யானைகளை அடர்ந்த வன பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் யானை விரட்டும் குழுவினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கிராம பகுதியில் கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story