போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

X
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதில் மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக சித்தோடு காவல்துறையினருக்கு தெரியவர ஓடப்பள்ளத்தை சேர்ந்த திலகாவை(65) பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.மூதாட்டி திலகா அளித்த தகவலின் பேரில் சந்தோஷ்குமார்(20) பிடித்து அவரது வீட்டில் சோதனை செய்துள்ளனர்.அங்கு 90 மாத்திரைகள்,இன்சுலின், ஊசிகள் மூன்று செல்போன்கள் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆன்லைனில் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து அவற்றை மூதாட்டியிடம் கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.
Next Story

