துவரங்குறிச்சி கிராமத்தில், விவசாயிகள் - மாணவர்கள் கலந்துரையாடல்

X
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாரம், துவரங்குறிச்சி கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் துவக்க விழா துவரங்குறிச்சி பராசக்தி மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினார். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், மாணவர்கள்- விவசாயிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் வேளாண்மை குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். அப்போது, மாணவர்கள் புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிறைவாக, கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் குழு தலைவர் ராமசந்திரன் மற்றும் விஷ்ணு பிரசாத் ஊர் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Next Story

