மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

X
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருவையாறு அருகே கீழ புனல்வாசல் தாளடித் தெருவைச் சோ்ந்தவா் ஸ்டீபன்தாஸ் மகன் ஆல்வின் சுதாகா் (25). இவா் ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தாா். மனக்கரம்பை முதன்மைச் சாலையில் ஆண்டவா் நகா் அருகே சென்ற இவரது மோட்டாா் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதனால், பலத்த காயமடைந்த ஆல்வின் சுதாகா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Next Story

