பட்டா மாறுதலில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் வட்டாட்சியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் பிளக்ஸ் பேனர்

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பட்டா மாறுதலில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் வட்டாட்சியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ள சம்பவம் திமுகவினரிடையே அதிருப்தி அடைய செய்துள்ளது.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமம் நாகபாளையத்தில் குருசாமி என்பவர் தனது தகப்பனார் சண்முகத்தேவர் அவருடைய தம்பி தங்கவேல் தேவர் பெயரில் இரண்டரை சென்ட் இடம் இருந்துள்ளது.இந்த இடத்தை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு சந்திரசேகர் என்பவர் தனது தந்தை முத்துச்சாமி தேவர் அவரது அண்ணன் காளிமுத்து தேவர் இவர்களது பெயரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறைகேடாக பட்டா பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோசடி செய்து பட்டா மாறுதல் பெற்றதாகவும் பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரியும் குருசாமி என்பவர் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்தவரை கடந்த இரண்டு வருடங்களாக அலைக்கழிப்பு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்தவரை இரண்டு வருடங்களாக அலைக்கழிப்பு செய்து வரும் மல்லி கிராம நிர்வாக அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேனர் வைத்துள்ள சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணம் இருந்தால் மட்டுமே எந்த ஒரு வேலையும் நடைபெறுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.மாவட்ட நிர்வாகம் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டி : சசிக்குமார் ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்)
Next Story

