டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ....*

X
விருதுநகரில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் .... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மார்க் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமையில் கடந்த 22 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி தொடர்ச்சியுடன் நிரந்தரப் படுத்திட வேண்டும், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் விற்பனை பிரிவு ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் காலமறை ஊதியம் இதர பணப்பயன்களையும் சம வேலைக்கு சம ஊதியம் சட்டத்தின்படி டாஸ்மாக் ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு அரசு ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி உள்ள நிலையில் டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஓய்வு வயதையும் 60 ஆக உயர்த்திட வேண்டும் டாஸ்மார்க் நிறுவனத்தின் மருத்துவ திட்டத்தை திரும்ப பெற்று இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்ங்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

