ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை..*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மனைவி காமாட்சி வயது (61)என்பவர் மளிகை கடைக்கு சென்று எண்ணெயை வாங்கிவிட்டு ஊரணிப்பட்டி தெருவில் நடந்து வந்த போது அவருக்கு பின்னால் நடந்து வந்த ஒருவர் காமாட்சி அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் செயினை பறித்தி விட்டு தப்பி ஓடி உள்ளார் மூதாட்டி சத்தம் போட்டவுடன் அப்பகுதி மக்கள் அவரை விரட்டி பிடித்து நகர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வரை கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் அவர் மம்சாபுரம் துப்புரவு பணியாளர் காலனியை சேர்ந்த குழந்தைவேல் வயது (30) என்பதும் தற்போது இவர் டில்லியில் ராணுவத்தில் பணியாற்றி வருவதும் விடுமுறைக்கு ஊருக்கு வந்ததில் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் ராணுவ வீரர் மீது வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். செயின் பறிப்பில் ஈடுபட்ட ராணுவ வீரர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

