கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
X
அளவுக்கு மீறி முறையான அனுமதி இன்றி மண்ணையும் கற்களையும் எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னன் என்பவரின் மகன் பிரதீப் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது தான் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தாதிபுரத்திற்கு அருகில் கல்குவாரி அமைக்க அரசிடம் முறையாக உரிமம் பெற்று கல்குவாரி இயங்கி வருகிறது. மேற்கண்ட குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக குவாரி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கல்குவாரிக்கு விடப்பட்ட பகுதியான அந்த மலை முழுவதையும் வெட்டி கரைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிகமான வெடிபொருட்களை வைத்து பாறைகளை வெடிக்க செய்வதால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றது. அதிலிருந்து வெளியேறும் புகை மற்றும் காற்று மாசுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் கல்குவாரியில் கற்களை மட்டும் தான் வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அருகே உள்ள கிராவல் மண்ணையும் சேர்த்து முறை இன்றி அனுமதி இன்றி சட்டத்திற்கு புறம்பாக எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேற்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
Next Story