போச்சம்பள்ளி பகுதிகளில் நூக்கு விலை உயர்வு- வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

போச்சம்பள்ளி பகுதிகளில் நூக்கு விலை உயர்வு- வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க ஆங்காங்கே குளிர்பானங்கள் விற்பனை நடந்து வருகிறது. இந்த நிலையில் போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரிக்கு செல்லும் சாலைகளில் உள்ள பனங்காட்டூர், முதுகாம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதை சாலைகளில் டூவீலர் மற்றும் கார்களில் செல்வோர் நிறுத்தி நுங்கை வாங்கி செல்கின்றனர் இதனால் நுங்கு விற்பனை அமோகம் நடந்து வருகின்றது.கடந்த ஆண்டு 3 நுங்கு ரூ.10-க்கு விற்றது தற்போது3-நுங்கு 20-க்கு விற்பனை ஆகிறது.விலையை பொருட்படுத்தாமல் நுங்கை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
Next Story