அஞ்செட்டி: தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு.

அஞ்செட்டி: தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு.
X
அஞ்செட்டி: தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கோவள்ளி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மாதேஸ்வரன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி உரிகம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் நூற்றுக்கணக் கானோர் அந்த கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களில் சாம்பிராணி புகை போட தீ மூட்டினர். இதில் வந்த புகை மரத்தில் பரவியது தேன் கூட்டில் பட்டவுடன் தேனீக்கள் பறந்து வந்து அங்கிருந்தவர்கள் மீது தேனீக்கள் விரட்டி, விரட்டி கொட்டின. இதில் உரிகம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேவன் (56) என்பவர் தேனீக்களிடம் இருந்து தப்பி ஓடிய போது மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story