திருவேங்கடத்தில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் அப்பகுதி பொதுமக்களும் அச்சம்

X
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகில் உள்ள குருவிகுளம் சாலையில் சமீபத்தில் பெய்த மழைநீர் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ள இடங்களில் தேங்கியதால், சில மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இதன் காரணமாக சாலையோரம் உள்ள வாகன ஓட்டிகள் ஒருவித பயத்துடனேயே இப்பகுதியை கடந்து செல்கின்றனர். மின்கம்பம் கீழே விழுந்தால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர், சாய்ந்து கிடக்கும் மின்பங்களை சீரமைக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

