கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் நால்வர் கைது.

X
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சரவணபாண்டி (23) என்பவர் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா இந்திரா காலனியில் நண்பர் முனியாண்டி வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் காலை அப்பகுதி நண்பர் மோகன்ராஜூடன் பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த அதேபகுதி வினோத்குமார் உள்ளிட்டோர் முன்விரோதம் காரணமாக மோகன்ராஜ், சரவணபாண்டியை தாக்கினர். இதில் சரவண பாண்டி உயிரிழந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் மோகன்ராஜ் சிகிச்சை பெற்று வரும் நிலையில். இவ்வழக்கில் தொடர்புடைய வினோத்குமார் (32) மதுபாலாஜி (26), பாலமுருகன் (23), மணிகண்டன்( 24), ஆகியோரை நேற்று (ஏப் 21 )வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
Next Story

