குருவாடி கோயில் கும்பாபிஷேகத்தை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி}யிடம் கிராம மக்கள் மனு அளிப்பு

குருவாடி கோயில் கும்பாபிஷேகத்தை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி}யிடம் கிராம மக்கள் மனு அளிப்பு
X
குருவாடி கோயில் கும்பாபிஷேகத்தை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி}யிடம் கிராம மக்கள் மனு அளிக்கப்பட்டது.
அரியலூர், ஏப்.22- அரியலூர் அடுத்த குருவாடியில் கட்டி முடிக்கப்பட்ட விநாயாகர் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீப்க்சிவாச்}யிடம் அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், இக்கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படவுல்ளது. இந்நிலையில் இக்கிராமத்தில் வசிக்கும் சின்னதுரை, அவரது மனைவி சித்ரா, மகன் வசந்த், முத்து மகன் விஜய், தனவேல் மகன் திருநாவுக்கரசு ஆகியோர் தகராறு செய்து கும்பாபிஷேகம் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.மேலும், கோயிலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த முருகானந்தம் அவரது மனைவி நீலவேணி ஆகியோரை தாக்கினர். எனவே, மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். படவிளக்கம்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச்}யிடம் திங்கள்கிழமை மனு அளித்த குருவாடி கிராம மக்கள்
Next Story